எல்லா கலைகளிலும், நமக்கு திரைப்படம்தான் மிக முக்கியமானது.” – லெனின்
24 வது அகில இந்திய மாநாடு, மதுரை – வரவேற்புக்குழுவின் சார்பில் சமூக மாற்றத்திற்கான பார்வை கொண்ட இயக்குனர்களுக்கு ஓர் அழைப்பு!
குறும்பட போட்டியில் பங்கேற்பீர் !
தலைப்புகள்:
1. அன்பின் அலைகள் (Waves of Love)
2. கண்ணாடியின் இருபக்கங்கள் (Two Sides of the Mirror)
3. வெல்வதற்கு ஒரு உலகம் (A World to Win)
கருப்பொருள்: இந்த தலைப்புகள் வர்க்கம், சாதி, பாலினம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளை அணுகும் கதைகளைக் கொண்டிருக்கலாம்.
கால அளவு: 5-10 நிமிடங்கள் (படம் எந்த மொழியில் இருந்தாலும், ஆங்கிலத்தில் சப்டைட்டில் உடன் சமர்ப்பிப்பது தேர்வுக்குழுவுக்கு உதவியாக இருக்கும்)
2. திரைப்படத் துறையின் புகழ்பெற்ற முன்னோடிகளால் சிறந்த 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்
3. வெற்றியாளர்களின் படைப்புகள் 24வது தேசிய மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும்
தங்கள் குறும்படத்தை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கடைசி நாள் மார்ச் 31, 2025. காமெராவை எடுங்கள். உங்கள் கதைகளின் மூலம் புதிய உலகத்திற்கான கனவுகளை விதையுங்கள்!