Mon. Apr 28th, 2025

24வது அகில இந்திய மாநாட்டுக்கு
மாமதுரை தயாராகி வருகிறது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டுக்கு
மாமதுரை தயாராகி வருகிறது…

காணும் இடமெல்லாம் தோழர்களில் மாநாட்டுப் பணி அசரவைக்கிறது…

மாநாட்டு ஏற்பாட்டிற்கான தீர்மானிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவும் அவர்கள் பணியில் பம்பரமாய் சுழன்று பணியாற்றுகின்றனர்…

இன்று மதுரையில் மாநாட்டு கண்காட்சி தயாரிப்பு பணிக்காகவந்திருந்தேன்…  இடம், ஏற்பாடு, தேவைகள் குறித்து இறுதி செய்தோம்.

1. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெண்கள்
2. கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு
3. காவிகளின் வரலாற்று திரிபுகளுக்கு எதிராக சிந்து சமவெளியும் கீழடியும்
4. பாசிச அபாயம்

ஆகிய தலைப்புகளில் கண்காட்சி பணி நடந்து கொண்டிருக்கிறது.

வெண்மணியின் தத்ரூபமான சதுக்கம் தமுக்கம் மைதானத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். – தோழர் ரமேஷ் பாபு.

Related Post