கோழிக்கோட்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பான தீர்மா னத்தை நிறைவேற்றியது. அதன் முக்கிய அம்சங்கள்: நாம் வாழும் இந்த உலகம் ஒரு கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்போதைய உலக முதலாளித்துவ நெருக்கடி, 1930களின் பெரும் மந்த நிலையை விட பல அம்சங்களில் மிகவும் தீவிரமானதாக மாறியுள்ளது. இந்த நெருக்கடி முதலாளித்துவத்தின் அடிப்படை குணாதிசயமான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, சர்வதேச வர்க்க சக்திகளின் சமநிலை ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாக மாறிவிட்டது. இதனால் ஏகாதிபத்தியம், சோசலிசமும் மார்க்சிசமும் மரணித்து விட்டதாக தீவிர கருத்தியல் தாக்குதலை நடத்தியது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் அனைத்து நாடுகளையும் தனது சுழற்சிக்குள் இழுத்துள்ளது. ஆனால் காலப்போக்கில் அனைத்து நாடுகளிலும் வர்க்க போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. முதலாளித்துவம் ஒருபோதும் சுரண்டல் இல்லாததாகவோ நெருக்கடி இல்லாததாகவோ இருக்க முடியாது என்பதே உண்மை. சமூக ஜனநாயகம் முதலாளித்துவத்தை சீர்திருத்தி “மனித முகம்” கொடுக்க முடியும் என்ற கற்பனையை நாம் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். லத்தீன் அமெரிக்கா போன்ற இடங்களில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வெனிசுலா, ஈக்வடார், பொலிவியா போன்ற நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கங்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை செய்து வருகின்றன. வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது, பெரும்பாலான சோசலிசப் புரட்சிகள் முதலாளித்துவ வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளில் நடைபெற்றன என்பதையும் காண்கிறோம்.
முதலாளித்துவ நெருக்கடியின் அடிப்படைக் காரணங்கள் ‘
சர்வதேச நிதி மூலதனம் ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் நவீன கட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் பெரும் அளவில் மூல தன குவிப்பு மற்றும் மையப்படுத்துதலுக்கு வழி வகுத்துள்ளது. சமீபத்திய (2008) உலக நெருக்கடி “தனிநபர் பேராசையால்” அல்ல, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த தன்மையால் ஏற்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையேயும் பொ ருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. உலகமயமாக்கல், “வேலையில்லா வளர்ச்சி” என்ற நிலைக்கு வழிவகுத்துள்ளது. உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையினரின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. வளர்ந்த நாடுகளில் கூட தொழிலாளர்களின் ஊதியங்கள் நிலையாக இருந்து வருகின்றன அல்லது குறைந்து வருகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளின் வளங்களை தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றன. உலகளாவிய மூலதனத்தின் நோக்கம் என்பது இலாப அதிகரிப்பு மட்டுமே. முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆட்சியாளர் வர்க்கத்தால் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படுகிறது. இந்நெருக்கடி அதன் அடிப்படை முரண்பாட்டிலிருந்து எழுகிறது – உற்பத்தியின் சமூகத்தன்மைக்கும் தனிநபர் கையகப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாடு.
ஏகாதிபத்தியத்தின் புதிய ஆயுதங்கள் முதலாளித்துவ நெருக்கடியை நியாயப்படுத்த பின் நவீனத்துவம், சமூக ஜனநாயகம் போன்ற கருத்தியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பனிப்போர் காலத்தில் நிலவிய “கம்யூனிச எதிர்ப்பு” என்பது, இப்போது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற கோஷத்தால் மாற்றப் பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் “மனித உரிமைகள்” மற்றும் “உலகளாவிய மதிப்புகள்” பெயரில் சுயேச்சையான நாடுகளின் இறையாண்மையை மீறுகிறது. தகவல், தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு தொழில் நுட்பங்கள் (ICE) ஏகாதிபத்தியத்தின் கருத்தியல் மேலா திக்கத்தை வலுப்படுத்துகின்றன. பெருநிறுவன ஊடகங்கள் ஏகாதிபத்திய கருத்தியலைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. “மெருகூட்டப்பட்ட முதலாளித்துவம்” என்ற கருத்தாக்கத்தை நாம் கண்டிப்பாக நிராகரிக்க வேண்டும். அடிப்படை மனித சேவைகளின் தனியார்மயமாக்கல், ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் ஒரு பகுதியாகும். நவ-தாராளவாத கொள்கைகள் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கத்திற்கு வழிவகுக்கின்றன. பெரும் அளவிலான ஊழல், ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் ஒரு விளைவாகும். கூட்டுக் களவு முதலாளித்துவம் (அரசியல் தொடர்புகள் மூலம் மிகப் பெரும் வணிக நன்மைகள் பெறுதல்) பெருகி வருகிறது. அரசியல் செயல்பாடுகளில் பணத்தின் தலையீடு மிகப் பெரிய அளவு அதிகரித்து வருகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மிகப்பெரிய ஆயுத உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது. தெற்காசியாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடு அதிகரித்து வருகிறது. உலகளாவிய வர்த்தக அமைப்பு, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை சர்வதேச நிதி மூலதனத்தின் கருவிகளாக செயல்படுகின்றன.
சோசலிசத்தின் அனுபவங்கள் மற்றும் பாடங்கள்
சோசலிசம் மற்றும் சோவியத் யூனியனின் அனுப வங்களிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சோசலிசத்தின் வீழ்ச்சி உலக முதலாளித்து வத்தின் வெற்றியை குறிக்கவில்லை, மாறாக சோசலிசத்தின் குறிப்பிட்ட மாதிரிகளின் பிரச்சனைகளைக் காட்டு கிறது. சோசலிசம் என்பது வர்க்க சமூகத்திலிருந்து வர்க்கமற்ற சமூகத்திற்கான மாற்றத்தின் காலகட்டம் ஆகும். 21ஆம் நூற்றாண்டின் சோசலிசம், 20ஆம் நூற்றாண்டின் அனுபவங்களின் வெறும் மறுபதிப்பாக இருக்க முடியாது. சோசலிசத்தின் கீழ் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை சுதந்திரங்கள் மேலும் வலுப் படுத்தப்பட வேண்டும். சோசலிசத்தின் கீழ் உற்பத்தி சாதனங்களின் சமூக உடைமை இருக்க வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை சுதந்திரங்கள் சோசலிச சட்ட, அரசியல் மற்றும் சமூக அமைப்பின் பிரிக்க முடியாத அங்கங்களாக இருக்க வேண்டும். சோசலிசத்தில் சாதி ஒடுக்குமுறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். சோசலிசத்தில் “ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும்” மக்கள் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். சோசலிசத்தின் கீழ் உணவு பாதுகாப்பு, முழு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதா ரம் மற்றும் வீட்டுவசதி அனைவருக்கும் உறுதி செய்யப்படும். சீனாவின் சீர்திருத்தங்கள் உற்பத்தி சக்திகளை வளர்க்க உதவியுள்ளன, ஆனால் புதிய ‘முரண்பாடு களையும்’ உருவாக்கியுள்ளன. கியூபா, அமெரிக்க பொரு ளாதாரத் தடைகளை எதிர்த்து நிற்கிறது. வடகொரியா, தனது பொருளாதார முன்னேற்றத்திற்காக வெளிநாட்டு முதலீடுகளை நாடுகிறது. பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இடதுசாரி கூட்டணி அரசாங்கங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன. சோசலிச நாடுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் உற்பத்தி சக்திகளை வளர்க்க உதவுகின்றன. சோசலிசத்தின் கீழ் ஜனநாயகத்தை வளர்ப்பது மிகவும் முக்கியமானது. சோசலிச கட்டுமானத்தில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பங்களிப்பு அவசியம்.
இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் பாதை
இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றால் மட்டுமே சோசலிச மாற்றத்திற்கான பாதை திறக்கும். இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நடத்தப்பட வேண்டும். சிபிஐ(எம்) தலைமையில் தொழிலாளி-விவசாயி கூட்டணியை கட்டமைப்பது மிக முக்கியமானது. இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி வைத்துள்ளது. சர்வதேச நிதி மூலதனத்திற்கு ஏற்ப வளரும் நாடுகளின் அரசுகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்கின்றன. இந்தியாவில் சிறு, குறு விவசாயி களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடியின உரிமைகளுக்காக தீவிரமாக போராட வேண்டும். ஒடுக்குமுறை அனைத்திற்கும் எதிரான போராட்டம் பெண்கள் மீதான பாலின ஒடுக்குமுறையை முடிவு க்குக் கொண்டுவர வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட வேண்டும். உலகமயமாக்கலில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. வர்க்க, சாதி மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும். வர்க்க ஒற்றுமையை பாதிக்கும் சாதி, மத, பிராந்திய அடையாள அரசியலை எதிர்க்க வேண்டும். சுயாட்சி குழுக்கள் மற்றும் பழங்குடியினர் உரிமைகளை ஆதரிக்க வேண்டும். மதவாதத்தை எதிர்த்து மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும். தேசியவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஒரு நவீன நாடு என்பது பொதுவான மொழி, நிலப்பரப்பு, பொருளாதார வாழ்க்கை மற்றும் பொதுவான கலாச்சாரத்தில் வெளிப்படும் உளவியல் அமைப்பின் அடிப்படையில் உருவானது. தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். புரட்சிகர போராட்டத்தின் வடிவங்கள் ஆயுதப் போராட்டங்கள் எங்கும் பலன் தரவில்லை. கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில் இடதுசாரி சாகச வாதத்தை எதிர்க்க வேண்டும். நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட போராட்ட வடிவங்களின் சரியான கலவையை உருவாக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகம் மட்டுமே போராட்ட வடிவமாக இருக்க முடியாது. பெருவணிக வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து ஊடகங்களை விடுவிக்க வேண்டும். இடதுசாரி சாகச வாதம் மற்றும் திருத்தல்வாதம் ஆகிய இரண்டையும் எதிர்க்க வேண்டும். பெருந்திரள் அணிதிரட்டலின் மூலம் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். தொழிலாளி-விவசாயி கூட்டணியை வலுப்படுத்த வர்க்க அடிப்படையிலான பிரச்சாரங்கள் தேவை. சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு சுற்றுச்சூழல் நெருக்கடி முதலாளித்துவத்தின் இலாப நோக்கத்தால் மோசமடைகிறது. வளர்ந்த நாடுகளின் சூழல் சீரழிப்புக்கான பொறுப்புகளை அவை ஏற்க வேண்டும். சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு முதலாளித்துவம் பொறுப்பேற்க வேண்டும். பல நாடுகளின் சிக்கல்களுக்கான தீர்வு சமூகப் பொரு ளாதார அடிப்படையில் இருக்க வேண்டும். தேசிய இறை யாண்மையை பாதுகாப்பது ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் வளரும் நாடுகள் ஒன்றிணைய வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய கடமையாகும். ஜனநாயக உரிமை களை பாதுகாப்பது சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதி. சர்வதேச நிதி மூலதனத்திற்கு எதிராக மாற்றுத் திட்டங்களை உருவாக்க வேண்டும். சகல இடதுசாரி இயக்கங்களும் அரசியலில் பரந்த மக்கள் அணி திரட்டலை உருவாக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சோசலிசத்தின் கீழ் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். மூலதனத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வை வளர்க்க வேண்டும். சோசலிச வளர்ச்சியை முன்னெடுக்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆதரவு அவசியம். முதலாளித்துவம் மாற்றப்பட வேண்டுமே தவிர சீர்திருத்தப்பட முடியாது. பொதுவுடைமை இயக்கம் வர்க்க ஒற்றுமையை வலி யுறுத்த வேண்டும். சர்வதேச நிதி மூலதன ‘மாயாஜாலம்’, பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது, மாறாக புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஏகாதிபத்தியம் குறித்த தோழர் லெனின் பகுப்பாய்வு இன்றும் பொருத்தமானதாக உள்ளது. தற்போதைய ஏகாதிபத்திய கட்டத்தில் நிதி மூலதனம் தொழில் மூலதனத்தைவிட ஆதிக்கம் செலுத்துகிறது. உலக முத லாளித்துவம் அதன் நெருக்கடியை தொழிலாளி வர்க்கத்தின் மேல் சுமத்த முயற்சிக்கிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் சோசலிசமே ஒரே விடை. சோசலிசமே மனித விடுதலை மற்றும் முன்னேற்றத் திற்கான ஒரே பாதை என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.
தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ராஜேந்திரன்