மாநாடு நிறைவு:
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு, மதுரை சீத்தாராம் யெச்சூரி நகரில் (தமுக்கம்) ஏப்ரல் 6 அன்று நிறைவடைந்தது.
- மாநாட்டில் புதிய மத்தியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
- புதிய மத்தியக்குழுவில் 84 பேர் உள்ளனர். ஒரு இடம் காலியாக விடப்பட்டுள்ளது.
- மத்தியக்குழு உறுப்பினர்களில் 54 பேர் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தவர்கள். 30 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- புதிய மத்தியக்குழுவில் 20 சதவீதம் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
பொதுச்செயலாளர் தேர்வு:
- புதிய மத்தியக்குழுவின் கூட்டத்தில் எம்.ஏ.பேபி கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் தலைமைக்குழு:
- அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களாக 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- பினராயி விஜயன்
- எம்.ஏ.பேபி
- பி.வி. ராகவலு
- தபன்சென்
- நிலோத்பல் பாசு
- ஏ. விஜயராகவன்
- முகமது சலீம்
- அசோக் தாவ்லே
- ராமச்சந்திர தோம்
- எம்.வி. கோவிந்தன்
- ஜிதேந்திர சவுத்ரி
- கே. பாலகிருஷ்ணன்
- உ.வாசுகி
- அம்ரா ராம்
- ஸ்ரீதீப் பட்டாச்சார்யா
- விஜூ கிருஷ்ணன்
- மரியம் தாவ்லே
- ஆர்.அருண் குமார்

மத்தியக்குழு சிறப்பு அழைப்பாளர்கள்:
- 7 பேர் மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளனர்.
- 1.மாணிக் சர்க்கார் 2. பிரகாஷ் காரத் 3. பிருந்தா காரத் 4. சுபாஷினி அலி 5. எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை 6. பிமன் பாசு 7. ஹன்னன் முல்லா
மத்தியக்குழு நிரந்தர அழைப்பாளர்கள்:
- 4 பேர் மத்தியக்குழுவின் நிரந்தர அழைப்பாளர்களாக உள்ளனர்.
- 1.சுதீப் தத்தா 2. பால் சிங் 3. ஜான் பிரிட்டாஸ் 4. சுதன்வா தேஷ்பாண்டே

மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு:
- 6 பேர் கொண்ட மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
- ஜி.ராமகிருஷ்ணன் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- கட்டுப்பாட்டுக் குழுவில், எம்.விஜய குமார், யு.பசவராஜூ, ராபின் தேவ், ஜோகேந்திர சர்மா, ரமா தாஸ்
தமிழகத்தைச் சேர்ந்த மத்தியக்குழு உறுப்பினர்கள்:
- கே. பாலகிருஷ்ணன்
- உ. வாசுகி
- பி. சம்பத்
- பெ. சண்முகம்
- என். குணசேகரன்
- கே. பாலபாரதி
- ஆர். கருமலையான்
