Fri. Mar 14th, 2025

சிறப்பு கருத்தரங்கம்: விரும்பும் மொழியை கற்கலாம், திணிப்பை ஏற்க முடியாது – பெ.சண்முகம்

சிபிஐ(எம்) 24-வது அகில இந்திய  மாநாட்டையொட்டி திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடை பெற்ற திறந்தவெளி கருத்தரங்கிற்கு நகர செயலாளர் எம். பிரகலாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. லட்சுமணன் வரவேற்றார். இதில் சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது:

தேசத்தில் அனைவரையும் வழி நடத்துவது அரசியல் சாசனம். அந்த  அரசியல் சாசனத்தை கடைப்பிடிப்பதாக பதவி ஏற்பவர்கள் உறுதி ஏற் கிறார்கள். இறையாண்மை, மதச்சார்பின்மை, சோசலிசம், குடியரசு, ஜனநாயகம் ஆகிய அம்சங்களை கொண்டதே அரசியல் சாசனம். ஆனால் இதில் எந்த கோட்பாட்டையும் ஏற்காத பாஜகவிடம் இந்த நாடு சிக்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் கடு நிபந்தனை களுடன் வழங்கப்பட்டது. பஞ்சமர் தவிர வேறு எவரும் பயன்படுத்தினால் செல்லாது. ஆனால் 12 லட்சம் ஏக்  கர் நிலம் களவாடப்பட்டுள்ளது. பல போராட்டங்களுக்குப் பிறகு 2 லட்சம் ஏக்கர் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டது. அதிலும் இதுவரை இரண்டு ஏக்கர் நிலம் கூட மீட்கப்பட வில்லை” என்று அவர் சுட்டிக்காட்டி னார்.  திருவண்ணாமலை மாவட்டம் அருங்குணம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 7 ஏக்கர் நிலத்தை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைத்ததாகவும், ஆனால் ஆக்கிரமிப்பாளர் பெயரே நில உரிமையாளர் இடத்தில் உள்ள தால், மீட்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் பட்டியலின மக்கள் பயிரிட்டிருந்த பயிர்களை ட்ரோன் மூலம் அழித்துள்ளனர்.

தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு

 மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி பேசுகையில், “மொழி  வழி மாநிலம் உருவாக கம்யூனிஸ்டு கள் தான் முதலில் கோரிக்கை வைத்த னர். சென்னை, கன்னியாகுமரி தமிழகத்தோடு இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததும் கம்யூனிஸ்டு கள் தான்” என்றார்.  “தமிழகத்தில் என்எல்சி, சேலம் உருக்காலை, திருச்சி பெல், துப்பாக்கி தொழிற்சாலை, ஓசூர் அசோக்  லேலண்ட் உள்ளிட்ட தொழில் வளர்ச்சிக் காக சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து தொழில் வளர்ச்சி யை உருவாக்கியது கம்யூனிஸ்ட் தலைவர்கள்” என்று அவர் சுட்டிக் காட்டினார்.  

பெண்கள் மீதான வன்முறை  

சமூக செயல்பாட்டாளர் நர்மதா தேவி பேசுகையில், “2012ல் நிர்பயா  பாலியல் வன்கொடுமை, சமீபத்தில் கொல்கத்தா மருத்துவ மாணவி வன்கொடுமை ஆகிய கொடுமை களுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெற வேண்டும். ஆண்களுக்கு உள்ள உரிமை, சுதந்திரம் பெண்களுக்கும் உள்ளது என்பதை இந்த சமூகம் உணர வேண்டும்,” என்றார்.  “பாஜக ஆட்சியில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச் சென்ற அவலத்தை இந்த உலகம் கண்டது” என்று குறிப்பிட் டார்.  

மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ந. சேகரன், கே. வாசுகி, இரா. பாரி மற்றும் மாவட்ட குழு, இடைக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான பெரணமல்லூர் சேகரன் எழுதிய “நிறைகுடம்” நூலை மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் வெளியிட்டார்.

By Admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *