Fri. Mar 14th, 2025

மக்கள் நலன் காக்க தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24-வது அகில இந்திய மாநாடு 2025, ஏப்ரல் 2 முதல் 6 வரை – மதுரை.

  • இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு, தியாகங்கள் புரிந்த கம்யூனிஸ்ட் இயக்கம், பெற்ற விடுதலையை பாதுகாக்க இன்றுவரை போராடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
  • இந்திய அரசியல் சாசனத்தையும், மதநல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட தொடர்ந்து போராடி வரும் கட்சி…
  • மக்களை பாதிக்கக்கூடிய விலைவாசி உயர்வு, வேலையின்மை, பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வுக்கு எதிராக மக்களை திரட்டி போராடி வரும் கட்சி…
  • அரிசி, பருப்பு உள்ளிட்ட மருந்துகள் என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மீதும் போடப்பட்ட ஜி.எஸ்.டி வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி குரல் கொடுத்து வரும் கட்சி…
  • விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் என அனைவரின் நலன் காக்க தொடர்ந்து போராடி வரும் கட்சி…
  • கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை (நூறு நாள் வேலை) பாதுகாக்க தொடர்ந்து போராடி வரும் கட்சி…
  • வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், வீடில்லா மக்களுக்கு குடிமனை கேட்டும். அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா கேட்டும் போராடி வரும் கட்சி…
  • பெரு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் தேர்தல் பத்திரங்களை (Electrol Bonds) வாங்காமல் நேர்மையாக மக்களிடம் நிதி வசூலித்து செயல்பட்டு வரும் கட்சி…
  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை துவக்கி செயல்படுத்த போராடி வரும் கட்சி…
  • மேலூர் தாலுகா நாயக்கர்பட்டி – அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊராட்சி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து மக்கள் வாழ்வாதாரத்தையும், பல்லுயிர் பாரம்பரியங்களையும் அழிக்க முயற்சிப்பதை எதிர்த்து போராடும் கட்சி…
    மக்களுக்கான மாற்று கொள்கைகளை முன்வைத்து, மக்கள் போராட்டங்களை முன்வைத்து நடைபெறுகிற இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மாநாட்டின் நிறைவு நாளான ஏப்ரல் 6-ல் 10 ஆயிரம் செந்தொண்டர்கள் அணி வகுப்பும், 5 லட்சம் மக்கள் பங்கேற்கும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *