Fri. Mar 14th, 2025

வாட்சாப் குழுவில் இணைந்துகொள்வீர் !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில், மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கும் மல்டிமீடியா பக்கங்கள் தினமும் பகிரப்பட்டு வருகின்றன. இந்த உள்ளடக்கங்களில் பின்வரும் வகைகள் அடங்கும்:

  • மாநாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பாடல்கள் மற்றும் தியாக வரலாறுகள்.
  • அறிவியல் முன்னேற்றத்தில் மார்க்சியத்தின் பங்களிப்புகள் குறித்த விளக்கங்கள்.
  • தேசத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு.
  • உலகளாவிய அறிஞர்கள் மார்க்சியம் மற்றும் சோஷலிசத்தின் அவசியம் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள்.
  • தலைவர்களின் சிறப்புப் பேட்டிகள், கருத்தரங்க உரைகள் மற்றும் மல்டிமீடியா கோப்புகள்.

கட்சி கிளைகளுடனான இணைப்பு:
இந்த வாட்ஸ்அப் குழுக்களில் இன்னும் இணையாத மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் அல்லது கிளைச் செயலாளர்கள், தங்கள் வாட்ஸ்அப் எண்களை மாவட்டக்குழு மூலம் டிஜிட்டல் குழுவுக்கு அளித்தால், உடனடியாக அவை குழுவில் இணைக்கப்படும். மேலும், இக்குழுக்களில் பகிரப்படும் உள்ளடக்கங்களை பிற சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் தளங்களிலும் பகிர்ந்து, மாநாட்டுப் பிரச்சாரத்தை பரவலாக்க வேண்டுகிறோம்.

  • சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரக்குழு

By Admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *