வெள்ளி. மார்ச் 14th, 2025

சரித்திரம் படைக்கவுள்ள 24 வது மதுரை காங்கிரஸ் – பெ.சண்முகம்

சி.பி.ஐ(எம்) திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ஒரு சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான இரண்டாவது கட்ட நிதியாக ரூ. 23 லட்சம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது.

அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநாடு சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடக்க உள்ளது என்று மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார் அவர் மேலும் கூறியதாவது:

  • “சித்திரைத் திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் முக்கிய திருவிழாவாக வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள மதுரை மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் நடைபெறும் பேரணி சரித்திரத்தில் இடம் பிடிக்கும். இப்பேரணி அனைத்து தரப்பு மக்களாலும் பேசப்படும் என்ற பெருமை வாய்ந்ததாகும்.”
  • “இந்த மாநாட்டிற்கு திண்டுக்கல் மாவட்டம் தனி முத்திரையைப் பதிக்க வேண்டும். கட்சி வேறுபாடு பார்க்காமல் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதனை அனைத்துக் கட்சி தொழிலாளர்களும் பாராட்டி வருகின்றனர்.”
  • “கட்சி வேறுபாடு பார்க்காமல், சக தொழிலாளர்களிடம் மாநாட்டிற்கு அதிகளவு நிதி திரட்டிக் கொடுக்க வேண்டும். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் முடிந்த அளவு நிதி திரட்ட வேண்டும். நமது தோழர்கள் ஒரு நாள் ஊதியத்தை மாநாட்டு நிதியாக வழங்க முன்வர வேண்டும்.”
  • “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளி வர்க்கத்திற்கான கட்சி என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி தொழிற்சங்கங்களும் நம்மைப் பாராட்டி வருகின்றன. எனவே, அனைத்துக் மக்களையும் அணுகி மாநாட்டு நிதி திரட்ட வேண்டும்.”

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்:
இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வசந்தாமணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சிவமணி, வி.சுமதி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.


A special council meeting was held in Ottanchathiram, hosted by the Dindigul District Committee of the Marxist Communist Party. During the meeting, Rs. 23 lakhs was given to State Secretary P. Shanmugam as the second installment for the party’s All India Congress.

By Admin

Related Post

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன